வாரக்கடைசிக்கும் வாரநாட்களுக்கும் வித்தியாசம் தெரியாத விதமாக வாழக்கை வெட்டியாக சென்று கொண்டிருக்க, ஒரு ஞாயிறன்று நண்பனிடம் இருந்து அழைப்பு.
"வீட்ல வெட்டியாத்தானே இருக்க? படத்துக்கு போகலாமா? Transformers, நாங்க எல்லாம் போலாம்னு இருக்கோம்"
"டேய்ய்ய்.........., வர்றேன், நீ தான் வீட்டுக்கு வந்து கூட்டிட்டு போகணும்"
"சரி, ரெண்டு மணிக்கு வந்துடுறேன், ரெடியா இரு"
------------------------------------------------------
மூணு மணி நேரம் மூச்சு திணற திணற படம். ஷப்பான்னு சீட்ட விட்டு எந்திருச்சு விட்டா போதும்னு கிளம்பியாச்சு.
வண்டி எடுத்துட்டு வரேன்னு போனவன் பத்து நிமிஷமா ஆள காணும், அவ்ளோ கூட்டம்.
சலிப்போட தியேட்டர் வாசல் டீக்கடையில சிங்கிளா, என்ன செய்றது, Parasite வாழ்க்கை.
ஒரு வழியா வண்டி எடுத்துட்டு முன்னாடி வந்து நின்னான். ஏறி உக்காந்தேன். எரும மாடு மாதிரியான அவனுக்கு பின்னாடி குருவி மாதிரி நான். படத்தை பத்தி விவாதித்துக்கொண்டே சென்று கொண்டிருந்தோம்.
ஸ்பீட் பிரேக்கர்கள் போதாதென்று வழி நெடுக ஸ்கூட்டர் ஓட்டி செல்லும் பெண்கள் ஆங்காங்கே. ஒருத்தர ஓவர் டேக் செஞ்சு வண்டிய முறுக்கி வேகமெடுக்க முயற்சி செய்யும்போது, அடுத்த ஸ்கூட்டர் பெண், முன்னாடி.ரைட்டு, போன மாதிரித்தான். இதுவே தொடர்கதையாக,,,,
அடுத்து வந்த கட்டிங்ல திரும்பி சந்துல பூந்து போயிடலாம்னு சொன்ன என் பேச்சை கேட்டு வண்டியை திருப்பி, செலுத்தலானான். இத்தனைக்கும் மத்தியில் படத்தை பற்றிய விவாதம் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
குறுகலான சந்து. முன்னே ஸ்கூட்டியில் ஒரு இளம்பெண். ரோட்டிற்கு வலிக்காத அளவு மெதுவாக வண்டியை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தாள். சிக்னல் இல்லா நாலு ரோட்ட கூட ஈசியா க்ராஸ் செஞ்சிடலாம் போல, அந்த குறுகலான சந்துல இந்த பொண்ண க்ராஸ் செஞ்சு போகத்தான் எவ்ளோ கஷ்டம்.
என்ன நினைச்சுதோ தெரியல அந்த பொண்ணு, டப்புன்னு பிரேக்க போட்டு வண்டிய நிறுத்த, ப்ரேக் பிடிக்காத என் பிரென்ட் அந்த ஸ்கூட்டியில இடிச்சு வண்டிய நிப்பாட்டி அவனோட சேர்த்து என்னையும் ரோட்டுல புரள வச்சான். கீழ விழுந்தும் மீசையில மண்ணு ஒட்டல.
இடிச்சு ரெண்டு மைக்ரோ செக்கன்ட் கூட ஆகியிருக்காது, காலியாய் இருந்த ரோட்டுல திடிர்னு ஏழெட்டு பேர்.
எனி ஹெல்ப் ஷாலினிக்கள்.
கீழ விழுந்து கிடந்த நாங்க அவுட் ஆப் போக்கஸ்ல, அந்த பொண்ணு மேல முழு போக்கஸ்.
"ஏம்மா அடி ஏதும் படலையே''
"வண்டிக்கு ஒன்னு இல்லையே"
"பொறுக்கி பயலுக"
இன்னும் இது மாதிரி சில பல,,,,
அந்த புள்ளைய குசலம் விசாரிச்சு முடிக்கிறதுக்குள்ள தன் கையே தனக்குதவின்னு நாங்களே எந்திருச்சு, வண்டிய தூக்கி நிப்பாட்டினதுமே ஒரு பெருசு, "ஏண்டா கண்ண எங்க பொடனியில வச்சுட்டு வர்ரிங்களா? ஒன்னு கெடக்க ஒன்னு ஆகியிருந்தா அந்த புள்ள வீட்டுக்கு நீங்களா பதில் சொல்விங்க?"
"பொம்பள புள்ளைய பார்த்தா போதுமே கண்ணு மண்ணு தெரியாம வண்டி ஓட்டுறது" இன்னொருத்தர்.
மற்றுமொரு நடுத்தர வயது பெண் ஒருத்தி, "யாத்தீ, இவனுங்க வந்த வேகத்துக்கு புள்ளைக ஏதாவது குறுக்க போயிருந்தா அம்புட்டுத்தேன் போலையே",,,
யாரு நாங்க, வேகமா? நீ பார்த்தன்னு ? வெளிய பேச முடியாம என் மைன்ட் வாய்ஸ்.
என்ன நடந்ததுன்னு விளக்க வாய் திறக்கும் முன்னாடி ஒரு கீச்சுக்குரல்.யார்ன்னு குரல் வந்த திசை நோக்கி பாத்தா, அந்த புள்ளதான்.
"அவங்க மேல தப்பில்ல, தப்பு என் மேல தான். போன் கால் வந்தது, அதான் வண்டிய நிறுத்தினேன், இத எதிர்பார்க்காம வந்து இடிச்சுட்டாங்க"
அஹா, பெண்களுள் மாணிக்கமா அந்த பொண்ணு கண்ணுக்கு தெரிஞ்சது. அதான் அந்த பொண்ணே சொல்லிடுச்சுல்ல, கூட்டத்த கலைங்கன்னு சொல்ல, அலையா விருந்தாளியாக வந்தவர்கள் வாயடைத்து கிளம்பினர்.
"சாரிங்க" சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பி சென்றாள்.
- இவளும் பெண்தான் ;-)))
இவர்கள் திருந்தி விட்டார்கள், எனி ஹெல்ப்புகள்?
:)))

ஹா ஹா! :) வடிவேலு டயலாக் டெலிவெரி பண்றாமாதிரியே மைண்ட்ல ஓடுச்சு. :) :) :)
ReplyDeleteha ha
Deletevery nice :-)
ReplyDeleteamas32
ரொம்ப நன்றிம்மா :)))
Deleteஅடேய் மச்சி. ..
ReplyDeleteகலக்கல். .. 😎😊😀😀😁
அப்டியா? அவ்வ் # நன்றி :))
DeleteNall iruku na, with some twist
ReplyDelete:)))
Deleteதம்பி சிறப்பா எழுதறீங்க..
ReplyDelete-britto
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி,, நன்றி குருதேவா ;-))
Deleteதப்பை உணரும் பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் ...
ReplyDeleteஒரு சிலர் :))
ReplyDelete