Saturday, September 6, 2014

இவர்கள் இப்படித்தான் !

வாரக்கடைசிக்கும் வாரநாட்களுக்கும் வித்தியாசம் தெரியாத விதமாக வாழக்கை வெட்டியாக சென்று கொண்டிருக்க, ஒரு ஞாயிறன்று நண்பனிடம் இருந்து அழைப்பு.

"வீட்ல வெட்டியாத்தானே இருக்க? படத்துக்கு போகலாமா?  Transformers, நாங்க எல்லாம் போலாம்னு இருக்கோம்"

"டேய்ய்ய்.........., வர்றேன், நீ தான் வீட்டுக்கு வந்து கூட்டிட்டு போகணும்"

"சரி, ரெண்டு மணிக்கு வந்துடுறேன், ரெடியா இரு"

------------------------------------------------------

மூணு மணி நேரம் மூச்சு திணற திணற படம். ஷப்பான்னு சீட்ட விட்டு எந்திருச்சு விட்டா போதும்னு கிளம்பியாச்சு.

வண்டி எடுத்துட்டு வரேன்னு போனவன் பத்து நிமிஷமா ஆள காணும், அவ்ளோ கூட்டம்.

சலிப்போட தியேட்டர் வாசல் டீக்கடையில சிங்கிளா, என்ன செய்றது, Parasite வாழ்க்கை.

ஒரு வழியா வண்டி எடுத்துட்டு முன்னாடி வந்து நின்னான். ஏறி உக்காந்தேன். எரும மாடு மாதிரியான அவனுக்கு பின்னாடி குருவி மாதிரி நான். படத்தை பத்தி விவாதித்துக்கொண்டே சென்று கொண்டிருந்தோம்.

ஸ்பீட் பிரேக்கர்கள் போதாதென்று வழி நெடுக ஸ்கூட்டர் ஓட்டி செல்லும் பெண்கள் ஆங்காங்கே. ஒருத்தர ஓவர் டேக் செஞ்சு வண்டிய முறுக்கி வேகமெடுக்க முயற்சி செய்யும்போது, அடுத்த ஸ்கூட்டர் பெண், முன்னாடி.ரைட்டு, போன மாதிரித்தான். இதுவே தொடர்கதையாக,,,,

அடுத்து வந்த கட்டிங்ல திரும்பி சந்துல பூந்து போயிடலாம்னு சொன்ன என் பேச்சை கேட்டு வண்டியை திருப்பி, செலுத்தலானான். இத்தனைக்கும் மத்தியில் படத்தை பற்றிய விவாதம் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

குறுகலான சந்து. முன்னே ஸ்கூட்டியில் ஒரு இளம்பெண். ரோட்டிற்கு வலிக்காத அளவு மெதுவாக வண்டியை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தாள். சிக்னல் இல்லா நாலு ரோட்ட கூட ஈசியா க்ராஸ் செஞ்சிடலாம் போல, அந்த குறுகலான சந்துல இந்த பொண்ண க்ராஸ் செஞ்சு போகத்தான் எவ்ளோ கஷ்டம்.

என்ன நினைச்சுதோ தெரியல அந்த பொண்ணு, டப்புன்னு பிரேக்க போட்டு வண்டிய நிறுத்த, ப்ரேக் பிடிக்காத என் பிரென்ட் அந்த ஸ்கூட்டியில இடிச்சு வண்டிய நிப்பாட்டி அவனோட சேர்த்து என்னையும் ரோட்டுல புரள வச்சான். கீழ விழுந்தும் மீசையில மண்ணு ஒட்டல.


 இடிச்சு ரெண்டு மைக்ரோ செக்கன்ட் கூட ஆகியிருக்காது, காலியாய் இருந்த ரோட்டுல திடிர்னு ஏழெட்டு பேர்.

எனி ஹெல்ப் ஷாலினிக்கள்.

கீழ விழுந்து கிடந்த நாங்க அவுட் ஆப் போக்கஸ்ல, அந்த பொண்ணு  மேல முழு போக்கஸ்.

"ஏம்மா அடி ஏதும் படலையே''

"வண்டிக்கு ஒன்னு இல்லையே"

"பொறுக்கி பயலுக"

இன்னும் இது மாதிரி சில பல,,,,

அந்த புள்ளைய குசலம் விசாரிச்சு முடிக்கிறதுக்குள்ள தன் கையே தனக்குதவின்னு நாங்களே எந்திருச்சு, வண்டிய தூக்கி நிப்பாட்டினதுமே ஒரு பெருசு, "ஏண்டா கண்ண எங்க பொடனியில வச்சுட்டு வர்ரிங்களா? ஒன்னு கெடக்க ஒன்னு ஆகியிருந்தா அந்த புள்ள வீட்டுக்கு நீங்களா பதில் சொல்விங்க?"

"பொம்பள புள்ளைய பார்த்தா போதுமே கண்ணு மண்ணு தெரியாம வண்டி ஓட்டுறது" இன்னொருத்தர்.

மற்றுமொரு நடுத்தர வயது பெண் ஒருத்தி,  "யாத்தீ, இவனுங்க வந்த வேகத்துக்கு புள்ளைக ஏதாவது குறுக்க போயிருந்தா அம்புட்டுத்தேன் போலையே",,, 

யாரு நாங்க, வேகமா? நீ பார்த்தன்னு ? வெளிய பேச முடியாம என் மைன்ட் வாய்ஸ்.

என்ன நடந்ததுன்னு விளக்க வாய் திறக்கும் முன்னாடி ஒரு கீச்சுக்குரல்.யார்ன்னு  குரல் வந்த திசை நோக்கி பாத்தா, அந்த புள்ளதான்.

"அவங்க மேல தப்பில்ல, தப்பு என் மேல தான். போன் கால் வந்தது, அதான் வண்டிய நிறுத்தினேன், இத எதிர்பார்க்காம வந்து இடிச்சுட்டாங்க"

அஹா, பெண்களுள் மாணிக்கமா அந்த பொண்ணு கண்ணுக்கு தெரிஞ்சது. அதான் அந்த பொண்ணே சொல்லிடுச்சுல்ல, கூட்டத்த கலைங்கன்னு சொல்ல, அலையா விருந்தாளியாக வந்தவர்கள் வாயடைத்து கிளம்பினர்.

"சாரிங்க" சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பி சென்றாள்.

- இவளும் பெண்தான் ;-)))


இவர்கள் திருந்தி விட்டார்கள், எனி ஹெல்ப்புகள்?

:)))




Monday, July 7, 2014

அழகி !

"வெட்டியாத்தானே இருக்க, போயி மளிகை சாமான் வாங்கிட்டு வா"......

அம்மாவின் குரல் அடுப்படியில் இருந்து,,,

படிச்சு முடிச்சுட்டு வேலை கிடைக்காம, வேலை தேடிட்டு வீட்ல இருக்க பசங்க எதிர்கொள்ளும் வாக்கியங்களுள் முக்கியமானது இது...

ஏற்கனவே எழுதிவச்ச லிஸ்ட் ஒன்ன கைல கொண்டுவந்து திணிச்சுட்டு திரும்ப அமெரிக்காவுக்கே, oops,, திரும்ப அடுப்படிக்கே போயிட்டாங்க..

சொவத்துல தொங்கிட்டு இருந்த வண்டி சாவிய எடுத்துக்கிட்டு வேண்டாவெறுப்பா கிளம்பினேன். Electric starterஅ செல்லமா அமுக்கினா, லட்சுமி ஸ்டார்ட் ஆகல, திரும்ப மெல்லமா அமுக்கி ஸ்டார்ட் செய்ய ட்ரை செஞ்சேன், இந்த முறையும் தோல்வி. கிக்கர கடுப்புல ஓங்கி ஒரு மிதி மிதிச்சு, ஆக்சிலேட்டர் காத திருகி வண்டிய கிளப்பினேன். Yes, அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவுரதில்லை.

போஸ்ட் கம்பத்த பார்ததும் பாய்ஞ்சு ஓடுற நாய் மாதிரி, பாணி பூரி கடைய பார்த்ததும் வண்டிய கடை பக்கம் திருப்பி ஒரு ஓரமா ஸ்டேன்ட் போட்டு நிறுத்தினேன். ஏரியாவுக்கு புதுசு போல, இதுக்கு முன்னாடி அங்க அந்த கடைய பார்த்ததில்லை. "தஹி பூரி ஒரு ப்ளேட் போடுங்க"ன்னு சொல்லிட்டு பார்க் செஞ்சு வச்சிருந்த வண்டி சீட்ல போயி என் சீட்ட பார்க் செஞ்சேன்.

கும்பல்ல இருந்து தனித்தனியே பிரித்தெடுத்த பூரியை உடச்சு, பிசஞ்சு வச்சிருந்த கிழங்கு கலவைய லாவகமா உள்ள வச்சு, ப்ளேட்ல அடுக்கிட்டு, ஏதோ நீராகரத்த ஸ்பூன்ல எடுத்து உள்ள ஊத்தி,ஹட்சன் தயிர் பாக்கெட் ஒன்ன ஒடச்சு பூரி குழியை நிரப்பியபின் மேல கொஞ்சமா ஓமப்பொடிய தூவிட்டு என் பக்கம் திரும்பி தட்ட நீட்டினார்.

வாங்கிட்டு வந்து திரும்ப வண்டியில உக்காந்து ஒவ்வொரு பூரியா எடுத்து சாப்பிட்டுட்டே ரோட்டுல போற வர்றவங்கள பார்த்துட்டு இருந்தேன். அப்போ திடிர்ன்னு மின்னல் அடிச்சா மாதிரி பளீர்ன்னு ஒரு வெளிச்சம், என்னடா இது மழை வர்ற மாதிரி கூட இல்லையே, எங்கிருந்து மின்னல்ன்னு திரும்பின பக்கம் ஒரு "அழகான பொண்ணு" Yamaha Ray Zல வந்திறங்கி  காய்கறிக்கடை உள்ள போனுது. அஹா, என்னவொரு என்னவொரு அழகியடா பாட்டு மூளைக்குள்ள கிச்சு கிச்சு மூட்டினுச்சு.

காய்கறிக்கடை வாசலயே வெறிக்க வெறிக்க பார்த்தபடி கைல இருந்த ப்ளேட்ல பூரி காலியானது கூட தெரியாம தடவிட்டு இருந்தேன் அஞ்சு நிமிஷமா. கடைக்காரர் வந்து "தம்பி ப்ளேட்?"ன்னதும் தான் சுயநினைவு மாமியார் வூட்லே இருந்து திரும்பியது."ஆஹம், இந்தாங்க, அண்ணே இன்னொரு ப்ளேட் போடுங்க, கொஞ்சம் மெதுவா தந்தா போதும்"ன்னு சொல்லிட்டு கடை பக்கம் Tripod போட்டு பார்வைய ஃபிக்ஸ் செஞ்சேன்.

IRCTC தட்கல் டிக்கெட் டீட்டைல்ஸ் எல்லாம் பூர்த்தி செஞ்சிட்டு, amount transaction காத்திருக்கும் DOG போல காத்திருந்தேன். அஞ்சு நிமிசத்துல அடுத்த ப்ளேட் கைல, "இதுதான் உன் மெதுவா?"ன்னு அவர் பார்த்து கேக்க போகும்  முன்னாடியே திறந்த வாய்ல ஒரு பூரிய போட்டு அடைச்சுட்டேன்.

அடுத்த அஞ்சாவது நிமிஷம், அந்த பொண்ணு ஓரி கேரி பேக்ல காய்கறி வாங்கிட்டு வந்து வண்டியில மாட்டிச்சு. தட்டுல இருந்த மிச்ச பூரியையும் ஒரே Gulpல வாய்ல போட்டுட்டு, கடைக்காரர் கைல வந்து அம்பது ரூவாய குடுத்துட்டு வேகமா வண்டிய ஸ்டார்ட் செய்ய வந்தேன். கடைக்காரர்,"தம்பி மீதி காசு வாங்கிட்டு போப்பா"ன்னார். காது கேகாதவனாட்டம், Electric Starter அமுக்கி வண்டிய கிளப்ப போனா, Electric Starter மர்கயான்றது மூளைல ஃப்ளாஷ் ஆச்சு. கிக்கர தேடிப்புடிச்சு வண்டிய ஸ்டார்ட் செய்றதுக்குள்ள அந்த பொண்ணு ஜம்முன்னு வண்டிய ஸ்டார்ட் செஞ்சு கும்முன்னு ரோட் க்ராஸ் செஞ்சு Opposite Rightல இருந்த மளிகைக்கடை முன்னாடி போயி வண்டிய நிறுத்தி கடைவாசல்ல போயி நின்னுச்சு.

கொஞ்சம் நிதனமானேன், வண்டிய நிறுத்திட்டு போயி மீதி சில்லறைய கடைக்காரர்கிட்ட வாங்கினேன். பார்வை மட்டும் அந்த கடை வாசல்லையே குத்த வைத்து அமர்ந்தது. கடைல கூட்டமில்லை, ரெண்டு நிமிசத்துல ஏதோ பொட்டலத்த வாங்கி கேரி பேக் உள்ள போட்டு வாங்கிட்டு வந்து அதையும் வண்டியில தொங்கப்போட்டுட்டு, ஜம்முன்னு உக்காந்து வண்டிய ஸ்டார்ட் செஞ்சு திருப்பிட்டு நான் நின்ன திசை நோக்கி வண்டிய விட்டு, என பக்கத்துல வந்து நின்னது. உள்ளுர குஷி, வெளியில பயம். பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக் ரேஞ்சுல நின்னுட்டு இருந்த என்னை பார்த்து "அண்ணா கொஞ்சம் தள்ளிக்கோங்க"ன்னு சொல்லிட்டு பாணி பூரி கடைகிட்ட போச்சு.

தலையில இடியே விழுந்தா மாதிரி இருந்தது ஒரு செக்கன்ட்.



காய்கறிக்கடை, மளிகைக்கடை, பாணி பூரிக்கடை # ஒவ்வொரு கடைக்கும் கிட்டத்தட்ட பத்தடி தூரம்தான் இருக்கும், வண்டிய பொதுவா ஒரு இடத்துல நிறுத்தி எல்லாம் வாங்கிட்டு, வண்டிய எடுத்துட்டு போகாம, பத்தடி தூரத்து ரோட்ட நடந்து க்ராஸ் செய்யாம வண்டில கடந்த அந்த பொண்ணு அறிவாளித்தனத்த நினச்சு சிப்பு சிப்பா வந்துச்சு, அடியேய், சும்மா தொங்கிட்டு இருந்த பல்ப ஏண்டி ஒடச்ச ரேஞ்சுக்கு எனக்குள்ளே பேசிட்டு வண்டிய எடுத்து ஸ்டார்ட் செஞ்சிட்டு கிளம்பிட்டேன்.


அது சரி, "அழகான பொண்ணு"ன்றப்போவே நான் யோசிச்சிருக்கணும்.